யாழில் நடு வீதியில் ஆணும் பெண்ணும் சண்டை! - Yarl Thinakkural

யாழில் நடு வீதியில் ஆணும் பெண்ணும் சண்டை!


யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் நடு வீதியில் நின்று தலைக்கவசங்களால் மாறி மாறி சண்டையிட்ட குடும்பத்தலைவர் ஒருவரும் பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றால் எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

நல்லூர் கிட்டுப்பூங்காவுக்கு அண்மையாக பிரதான வீதியில் நேற்றுமுன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. 

வீதியில் நின்று இருவரும் தலைக்கவசங்களால் மாறி மாறி சண்டையிட்டுள்ளனர். சுமார் 30 -35 வயது மதிக்கத்தக்க ஆண், பெண் இருவருமே இவ்வாறு சண்டையிட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்தனர். 

அதனடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரணை செய்த நீதிவான் ஏ.எஸ்.பி.போல், இருவரையும் கடுமையாக எச்சரித்து பிணையில் விடுவித்தார். அத்துடன் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Previous Post Next Post