யாழ்.நாகவிகாரையில் ரணில் வழிபாடு! - Yarl Thinakkural

யாழ்.நாகவிகாரையில் ரணில் வழிபாடு!

நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் நாகவிகாரையில் விசேட வழிபாடுகளை இன்று வெள்ளிக்கிழமை மேற்கொண்டிருந்தார்.

வடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் இன்று கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களுக்குச் சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அங்கு நிகழ்வுகளை முடித்துக் கொண்டு மீளவும் யாழ்ப்பாணம் வந்த பிரதமர் இன்று மாலை யாழ் நகரிலுள்ள நாகவிகாரைக்குச் சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் விகாராபதியிடம் ஆசி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post