நாட்டிற்குள் ஊடுருவிய இந்தியர் கடற்படையால் கைது! - Yarl Thinakkural

நாட்டிற்குள் ஊடுருவிய இந்தியர் கடற்படையால் கைது!

தலைமன்னார் - ஊர்மலை பகுதி ஊடாக இலங்கைக்குள் நுழைய முற்ப்பட்ட இந்தியாவினைச் சேர்ந்த நபரை இலங்கை கடற்படையினர் கைது நேற்று வியாழக்கிழமை செய்துள்ளனர்.

குறித்த கடற்பரப்பில் வழமை போன்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கடற்படையினர் அப்பகுதியில் சந்தேகத்திற்க்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரனண நடத்தினர்.

விசாரணையில் அவர் இந்தியாவை சேர்ந்தவர் என்பதும் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்தது தெரியவந்துள்ளது.


உடனடியாக கைது செய்யப்பட்ட அவர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்ட இந்தியரிடம் இருந்து 1200 மில்லி கிராம் கேரள கஞ்சா, இரண்டு சிம்கார்ட், மூன்று பாஸ்போர்ட் சைய்ஸ் புகைப்படங்கள், 20 ரூபாய் இந்திய பணம் மற்றும் 200 ரூபாய் இலங்கை பணம் கைப்பற்றப்பட்டது.
Previous Post Next Post