முல்லை சாலை கடலும் தென்னிலங்கை மீனவர்களுக்கு தாரைவார்ப்பு! - Yarl Thinakkural

முல்லை சாலை கடலும் தென்னிலங்கை மீனவர்களுக்கு தாரைவார்ப்பு!

முல்­லைத்­தீவு சாலை கடல் பகுதியும் தென்னிலங்கை மீனவர்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இக் கடற்பரப்பில் 18 மீனவர்கள் தொழலில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கியுள்ள கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் அனுமதியை வழங்கியே தென்னிலங்கை மீனவர்களுக்கு முல்லைத்தீவு கடலை தாரைவார்த்து கொடுத்துள்ளதாக கடும் கண்­ட­னத்தை முல்­லைத்­தீவு மீனவ அமைப்­புக்­கள் பதி­வு­செய்­தன.

சம்­ப­வம் தொடர்­பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:-

தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்த பட­கு­கள் சில முல்­லைத்­தீவு சாலை கடற்­ப­ரப்­பில் கடற்­தொ­ழி­லில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றமை முல்­லைத்­தீவு மீன­வர்­க­ளால் நேற்­று­முன்­தி­னம் அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து முல்­லைத்­தீவு மீனவ அமைப்­புக்­கள் ஊடாக விட­யம் முல்­லைத்­தீவு மாவட்ட நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளத்­துக்­குத் தெரி­விக்­கப்­பட்டு அதன் அதி­கா­ரி­கள் சம்­பவ இடத்­துக்கு நேற்­று­மாலை சென்று விட­யத்தை ஆராய்ந்­துள்­ள­னர்.

இதன்­போது, கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­கள பணிப்­பா­ளர் நாய­கத்­தால் நேர­டி­யாக 18 பட­கு­க­ளுக்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ள­மை­யும், ஒரு மீன­வரே அத்­தனை அனு­ம­தி­க­ளை­யும் பெற்­று­வைத்­துள்­ளார் என்­ப­தும் தெரி­ய­வந்­தது.

இது தொடர்­பில் முல்­லைத்­தீவு மாவட்ட கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளத்­தி­ணைக்­கள உத­விப்­ப­ணிப்­பா­ள­ரி­டம் கேட்­ட­போது, முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் சாலை பகு­தி­யில் கடற்­தொ­ழி­லில் ஈடு­பட 18 பட­கு­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதன் பிர­தி­களை முல்­லைத்­தீவு மாவட்ட கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பி­யுள்­ளார்­கள். கொழும்பு அமைச்­சில் இருந்து வரும் கடற்­தொ­ழில் அனு­ம­தி­யினை நாங்­கள் ஒன்­றும் செய்­ய­மு­டி­யாது – என்­றார்.
Previous Post Next Post