லெஸ்பியன் நண்பர்களுடன் நடிகை ரெஜினா! - Yarl Thinakkural

லெஸ்பியன் நண்பர்களுடன் நடிகை ரெஜினா!

ஓரினச் சேர்க்கையாளர்கள் சிலர் எனது நண்பர்களாக இருக்கிறார்கள் என்று நடிகை ரெஜினா கஸான்ட்ரா கூறியுள்ளார்.

கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரெஜினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் அமைதியான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து கவர்ச்சியாக களமிறங்கிய ரெஜினா தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஷ்ணு விஷாலுடன் இவர் நடித்திருந்த சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. மேலும் இவர் நடித்துள்ள பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் தற்போது பாலிவுட் இயக்குநர் ஷெல்லி சோப்ராதர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏக் லடிக்கி கோ தேகா தோ ஐசா லகா’ படத்தில் ரெஜினா லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அனில் கபூர், ஜூஹி சாவ்லா, சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தில் சோனம் கபூர் ஓரினச் சேர்க்கையாளராக நடித்துள்ளார்.

அவரது தோழியாக ரெஜினா நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி 1-ம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அதேவேளையில் குஹ என்ற துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்ததற்காக திரைப்பட விமர்சகர்கள் பலரும் ரெஜினாவை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் படம் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த ரெஜினா, ‘எனக்கு ஓரினச் சேர்க்கை பழக்கமுடைய நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் எனக்கு தெரிந்த ஒருவரை அவரது குடும்பம் ஏற்றுக் கொண்டுள்ளது.

சமூகத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றி நல்ல புரிதல் வேண்டும். அவர்களை நோக்கிய நமது பார்வை மாற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
Previous Post Next Post