யாழில் விபத்தை தவிர்த்த சாதூரிய ரயில் சாரதி! - Yarl Thinakkural

யாழில் விபத்தை தவிர்த்த சாதூரிய ரயில் சாரதி!

யாழ்ப்பாணத்தில் ஏற்படவிருந்த பெரும் ரயில் விபத்து ரயில் சாரதியின் சாமர்த்தியத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி இன்று சனிக்கிழமை காலை 6.10 மணிக்கு புறப்பட்ட உத்தரதேவி (புதிய ரயில்) யாழ்.கச்சேரி ரயில் கடவையை அண்மித்த வேளை ரயின் கடவை கதவுகள் பூட்டப்படவில்லை. சமிஞ்சை ஒலி மற்றும் விளக்குகளும் ஒளிரவில்லை. 
இதனை அவதானித்த ரயிலின் சாரதி ரயிலின் வேகத்தை குறைத்து குறித்த ரயில் கடவைக்கருகில் ரணிலை நிறுத்தியுள்ளார். 
சுமார் 10 நிமிடங்கள் அவ்விடத்தில் ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் ரயில் கடவை காப்பாளர் எழுந்து ரயில் கடவை கதவினை மூடிய பின்னரே ரயில் அங்கிருந்து கொழும்பு நோக்கிய பயணத்தை தொடர்ந்தது. 
இச் சம்பவம் தொடர்பில் குறித்த ரயில் கடவை பாதுகாவலரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 
Previous Post Next Post