யாழ்.பல்கலையில் பறக்கிறது கறுப்பு கொடி! - Yarl Thinakkural

யாழ்.பல்கலையில் பறக்கிறது கறுப்பு கொடி!

இலங்கையின் சுதந்தினத்தை நாளை கரிநாளாக பிரகடணப்படுத்தியிருந்த யாழ்.பல்கலைக்கழகத்தினர் இன்று திங்கட்கிழமை அதனை வெளிப்படுத்தும் வகையில் பல்கலைககழக வளாகத்தில் கறுப்பு கொடிகளை கட்டி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் இராமநாதன் வீதி பல்கலைகழகத்தின் பிரதான நுழைவாயிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் எமக்கு எப்போது சுதந்திர தினம்? என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகையும் வாசலில் கட்டப்பட்டுள்ளது.


Previous Post Next Post