ட்ரோன் போட்டியில் வெற்றியை குவித்த அஜித் - Yarl Thinakkural

ட்ரோன் போட்டியில் வெற்றியை குவித்த அஜித்ஏரோ இந்தியா விமான கண்காட்சியின் ஓர் அங்கமான ட்ரோன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடிகர் அஜித்தின் 'தக்‌ஷா' குழு மூன்று பிரிவுகளில் பெற்றி பெற்றுள்ளது.

நடிகர் என்பதை தாண்டி கார், பைக் பந்தயம், புகைப்படக் கலை ஆகிய துறைகளில் தடம் பதித்தவர் அஜித். இந்தியாவிலே விமானி உரிமம் பெற்ற நடிகர் இவர் ஆவார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு சென்னை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா குழுவின் ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டார். அதன் மூலம் ஆளில்லா விமானங்களை உருவாக்க மாணவர்களுக்கு உதவினார். அஜித்தின் வழிகாட்டுதலில் 'தக்‌ஷா' அணியின் ட்ரோன் (ஆளில்லா விமானம்) நீண்ட நேரம் வெற்றிகரமாக பறந்து சாதனை படைத்தது.

இந்நிலையில் பெங்களுரில் நடாத்தப்பட்ட 'ஏரோ இந்தியா - 2019' விமான கண்காட்சியில் 'ட்ரோன் ஒலிம்பிக்ஸ்' என்ற பெயரில் முதன்முறையாக போட்டிகள் நடாத்தப்பட்டன. இதில் அஜித்தின் தக்‌ஷா அணியும் கலந்து கொண்டது. ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடாத்தப்பட்டன.

இதில் 4கிலோவுக்கும் அதிகமான கண்காணிப்பு விமான பிரிவில் தக்‌ஷா அணி இரண்டாம் இடத்தையும், 4-20 கிலோவுக்கு இடையிலான கண்காணிப்பு விமானப் பிரிவில், முதலிடத்தையும் பிடித்தது.Previous Post Next Post