நிதி மோசடி விவகாரத்தை கையாள அரசு ஏன் அஞ்சுகிறது? சுமந்திரன் எம்.பி கேள்வி! - Yarl Thinakkural

நிதி மோசடி விவகாரத்தை கையாள அரசு ஏன் அஞ்சுகிறது? சுமந்திரன் எம்.பி கேள்வி!

பெரும் நிதி மோசடி குறித்து ஜனாதிபதியின் கைகளில் குற்றவாளியின் பெயர்கள் இருந்தும்கூட ஏன் இன்னும் அவர்கள் தண்டிக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

பெரும் நிதி மோசடி மற்றும் மத்திய வங்கிப் பிணைமுறி ஆணைக்குழு அறிக்கை மீதான சபை ஒத்துவைப்புவேளை பிரேரணையை முன்வைத்து நேற்று நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி கேட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

குற்றமிழைத்தவர் தண்டிக்கப்பட ஏன் இவ்வளவு கால தாமதம்? ஆணைக்குழு தயாரித்த இந்த அறிக்கையின் பலன் என்ன?

குற்றச்சாட்டுக்கள் ஆதரங்களுடன் உள்ளன. பல குற்றங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் அறிக்கையாக ஜனாதிபதிக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. இப்போது இவற்றை குப்பைத்தொட்டியில் போட முடியாது.

இந்த ஆணைக்குழுக்களுக்கும்இ அதன் அறிக்கைகளுக்கும் என பொதுமக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால் நேரமும்இ பணமும் வீணடிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post