. இந்திய விமானிகளை சிறைப்பிடித்த பாக்., - Yarl Thinakkural

. இந்திய விமானிகளை சிறைப்பிடித்த பாக்.,


காஷ்மீர் எல்லையினுள் புகுந்து விமாணப்படையினர் நடத்தியது தாக்குதலில் இந்திய விமானிகள் இருவரை சிறைபிடித்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய விமானிகள் இருவரை சிறைபிடித்துள்ளோம். அவர்களிடமிருந்து ஆவணங்கள் மற்றும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிடிபட்ட விமானிகளின் ஒருவர் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இன்னொருவர் தங்கள் காவலில் உள்ளார். காவலிலிருக்கும் விமானியின் காணொளி ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
Previous Post Next Post