கவர்ச்சிக்கும்-கல்யாணத்துக்கும் தொடர்பில்லை! -எமி ஜாக்சன்- - Yarl Thinakkural

கவர்ச்சிக்கும்-கல்யாணத்துக்கும் தொடர்பில்லை! -எமி ஜாக்சன்-

சுப்பஸ்டார் ரஜினியின் 2.0 படம் வெளியான பிறகு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த நடிகை ஏமி ஜாக்சன், தனது காதலை ரகசியமாக வைத்திருந்தார். புதிய பட வாய்ப்புகள் எதுவும் வராததால் ஏமாற்றம் அடைந்தார்.

எனவே திடீரென்று இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனய்யோடோ உடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக தடாலடியாக அறிவித்தார். பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடை அணிந்த படங்கள், படு கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்த ஏமி ஜாக்சன் திருமண நிச்சயதார்த்தத்துக்கு பிறகும் அதை தொடர்ந்து வருகிறார்.

சமீபத்தில் ஆடை அணி வகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது படு கவர்ச்சியாக புதுவகை ஆடை அணிந்து வந்தார். இதுகுறித்து ஏமியிடம் கேட்டபோது, ‘அழகிபோட்டி நிகழ்ச்சியில் அழகை வெளிப்படுத்த வேண்டும். கல்யாணம் ஆகப்போகும் நிலையில் இப்படி கவர்ச்சியாக வரலாமா என்றெல்லாம் கேட்கக்கூடாது. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை’ என தெரிவித்திருக்கிறார்.

Previous Post Next Post