விஜயின் பாடல் பள்ளி பாட புத்தகத்தில்! - Yarl Thinakkural

விஜயின் பாடல் பள்ளி பாட புத்தகத்தில்!

இந்திய தமிழக அரசின் பள்ளிப் பாட புத்தகத்தில் இளைய தளபதி விஜயின் பாடல் இடம் பெற்றுள்ளது. அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகரான இளய தளபதி விஜய்க்கு 6 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் ரசிகர்களாக உள்ளார்கள்.

தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலும் இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இவர்கள் விஜயை பற்றி சிறிய தகவல் வெளியாகினால் கூட அதனை கோலாகலமாக கொண்டாடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

விஜய் 63 மீண்டும் இணைந்த மேஜிக் கூட்டணி, ஆனால்? – வெளியான அதிர்ச்சி அப்டேட்.!

தற்போதும் அப்படி தான் தமிழக அரசின் பள்ளி பாடத் திட்டத்தில் விஜய் நடிப்பில் வெளியான அழகிய தமிழ்மகன் படத்தின் பாடலான முன்னாள் முன்னாள் முன்னாள் முன்னாள் வாடா என்ற பாடல் இடம் பெற்றுள்ளது.

இந்த பாடலை கவிஞர் வாலி எழுத ரஹ்மான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி பாட புத்தகத்தில் இந்த பாடல் இருக்கும் புகைப்படம் இதோ
Previous Post Next Post