சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி பேட்டி - Yarl Thinakkural

சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி பேட்டி

பாகிஸ்தான் இராணுவம் தன்னை மரியாதையாக நடத்துவதாக பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையை சேர்ந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் இராணுவத்தினர் சிறைபிடித்து சென்றனர்.

இதையடுத்து நேற்று மாலை வெளியிடப்பட்ட வீடியோவில், அபிநந்தனுடன் பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் உரையாடுகின்றார். அப்போது அபிநந்தன், தேநீர் குடித்தவாறு பாகிஸ்தான் இராணுவம் என்னை நன்றாக நடத்துகின்றது. நான் இந்தியாவுக்கு சென்றாலும் என் கருத்தை மாற்ற மாட்டேன். பாகிஸ்தான் இராணுவத்தினரின் நடவடிக்கை விரும்பத்தக்க வகையில் உள்ளது. என்னை காப்பாற்றி நல்ல முறையில் கவனித்து வருகின்றார்கள் என தெரிவித்தார்.
Previous Post Next Post