யாழில் இருந்து கேதீஸ்வரத்திற்கு பாதயாத்திரை! - Yarl Thinakkural

யாழில் இருந்து கேதீஸ்வரத்திற்கு பாதயாத்திரை!

மகா சிவராத்திரியை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு பாதயாத்திரை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலக சைவத் திருச் சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதியிலிருந்து நேற்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்தது.

இங்கு வந்த அவர்கள் நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு தொடர்ந்து அங்கிருந்து யாத்திரை ஆரம்பமாகியது.

இப் பாத யாத்திரையானது செல்வச்சந்நிதியில் நேற்று 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி திருக்கேதீஸ்வரத்தைச் சென்று நிறைவடையவுள்ளது.

ஏ-9 வீதி வழியாக யாழில் இருந்து ஆரம்பமாகியுள்ள இப் பாத யாத்திரையானது ஆலயங்கள் தோறும் தரிசனங்களை மேற்கொண்டு செல்லவுள்ளதாகவும் இதில் அடியவர்களை இணைந்து கொள்ளுமாறு உலக சைவத் திருச்சபை கேட்டுள்ளது.
Previous Post Next Post