வாடகைத்தாய் மூலம் குழந்தை! -அதிகம் விரும்பும் திரையுலகத்தினர்- - Yarl Thinakkural

வாடகைத்தாய் மூலம் குழந்தை! -அதிகம் விரும்பும் திரையுலகத்தினர்-

இந்தி பட உலகில் நடிகர், நடிகைகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்து வருகிறது.

நடிகர்கள் அமீர்கான், சாருக்கான், இயக்குனர் கரண் ஜோஹர் ஆகியோர் வாடகைத்தாய் மூலம் ஏற்கனவே குழந்தை பெற்றனர்.

நடிகை சன்னிலியோன் வாடகைத்தாய் மூலம் தாய் ஆனார்.
இவர்கள் வரிசையில் பிரபல இந்தி பெண் தயாரிப்பாளர் ஏக்தா கபூரும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று இருக்கிறார்.

இவர் நடிகர் ஜிதேந்திராவின் மகள் ஆவார். ஏராளமான இந்தி படங்களையும் டி.வி. தொடர்களையும் தயாரித்து இருக்கிறார். 43 வயதாகும் ஏக்தா கபூருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணத்தில் அவருக்கு விருப்பமும் இல்லை.

இந்த நிலையில் ஏக்தா கபூருக்கு தாயாகும் ஆசை ஏற்பட்டது. இதற்காக வாடகைத்தாயை ஏற்பாடு செய்தார். தற்போது அந்த வாடகைத்தாய் மூலம் ஆண்குழந்தை பெற்று தாயாகி இருக்கிறார்.

அவருக்கு நடிகர், நடிகைகளும் ரசிகர்களும், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற அவரது முடிவை பாராட்டவும் செய்கிறார்கள்.

ஏற்கனவே ஏக்தா கபூரின் தம்பியும், நடிகருமான துஷார் கபூரும் வாடகைத்தாய் மூலம் லக்சயா என்ற ஆண் குழந்தைக்கு தந்தை ஆனார். அவருக்கும் திருமணம் ஆகவில்லை.

இப்போது தம்பியைப்போல் ஏக்தா கபூரும் திருமணம் செய்துகொள்ளாமல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார்.
Previous Post Next Post