முல்லை சென்ற ரணிலை மறித்து போராட்டம்! -பொலிஸாரால் அடக்கப்பட்டது- - Yarl Thinakkural

முல்லை சென்ற ரணிலை மறித்து போராட்டம்! -பொலிஸாரால் அடக்கப்பட்டது-

வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சனிக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்றிருந்தார். 

அங்கு சென்ற அவர் மாவட்டச் செயலகத்தில் அதிகாரிகள் மற்றும் பாராளுமன்றம் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களை அழைத்து அபிவிருத்தி தொடர்பானா கலந்துரையாடலை நடத்தியிருந்தார். 

இக் கலந்துரையாடலை நடத்த வந்த பிரதமரை வழிமறித்து  காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் எங்கே என்று நீதி கோருவதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தனர். 

இருப்பினும் அங்கு குவிக்கப்பட்ட பொருமளவான பொலிஸார்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பிரதமரிடம் நெருங்க விடாது தடுத்து நிறுத்தியுள்ளனர். 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திய போராட்டத்தை பார்த்த வாறு வாகனத்தில் சென்ற பிரதமர் அவர்களை சந்திக்காமலேயே மாவட்டச் செயலகத்திற்கு சென்று கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளார். 

Previous Post Next Post