யாழில் ரயிலில் மோதுண்டு இளைஞர் சாவு! - Yarl Thinakkural

யாழில் ரயிலில் மோதுண்டு இளைஞர் சாவு!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள ரயில் கடவையில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நுணாவில் மேற்கு சாவகச்சேரியைச் சேர்ந்த 24 வயதான பாலமகேந்திரன் விக்னோஸ்வரன் என்ற இளைஞரே மேற்படி விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவர்.

இச் சம்பவம் தொடர்பல் மேலும் தெரியவருவது:-

இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்தில் திருத்தத்திற்காக கொடுத்த தனது மோட்டார் சைக்கிளைப் பார்வையிடுவதற்காக குறித்த இளைஞன் தனது நண்பணின் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

அங்கு வந்த அவர் ஏ-9வீதியில் இருந்து கந்தையா வீதிக்கு செல்லும் புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்ட போது கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த புகையிரதத்துடன் மோதுண்டுள்ளார்.

இதன் போது குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிலில் இருந்து தூக்கி வீசப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளை நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

தூக்கி வீசப்பட்ட இளைஞன் தலை மற்றும் கால் பகுதிகளில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக மேலதிக சிகிட்சைக்காக நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ); மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த கடவையில் தடுப்பு துலா இல்லாத போதிலும் சமிக்கை விளக்கு மற்றும் அபாய ஒலி காணப்படுகின்றன.

இருப்பினும் ஒரு பக்க சமிக்கை விளக்கு சரியாக இயங்குவதில்லை எனவும், அபாய ஒலியின் சத்தம் போதாது எனவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post