நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க புதிய யுத்தி! -மஹிந்த தேசப்பிரிய-  - Yarl Thinakkural

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க புதிய யுத்தி! -மஹிந்த தேசப்பிரிய- 

மக்களின் நோயை தீர்க்க வைத்தியர்கள் விற்றமின் வழங்குவது போன்று நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பவும், பாதுகாப்பதற்குமான விழிப்புணர்வு என்னும் விற்றமின்களை மக்கனிடத்தில் புகுத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசம்பிரிய தெரிவித்தார். 

யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று செவ்வாய் கிழமை காலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இச் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களால் நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்கும் முயட்சியில் ஈடுபட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவால் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு செயற்பாடுகளில் மூலம் ஜனநாயகத்தை 100 வீதம் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஆணைக்குழுவிற்கு உள்ளதா? என கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதல்ல. ஜனநாயகத்தை காப்பதுக்குமாக இல்லாமல், ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்கும், காப்பதற்குமான முயட்சியினையே தேர்தல்கள் ஆணைக்குழு செய்து வருகின்றது. 

அந்த முயட்சியில் ஒன்றாகவே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையான குறும்பட போட்டியினை நடாத்துகின்றோம். சுகயீனமுற்றிருக்கும் போது நாங்கள் வைத்தியர்களை நாடுகின்றோம். நாங்கள் வைத்தியர்களை நாடி மருத்தினை பெற்றுக் கொண்டால் எமக்கு ஏற்பட்டுள்ள சுகயீனம் மாறிவிடும் என்ற நம்பிக்கையிலேயே செல்கின்றோம். 

இதே போன்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப, பாதுகாக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. சில சந்தர்ப்பங்களில் நோய் குணமாக விற்றமினை பெற்றுக் கொள்ளுகின்றோம். 

இப்போது தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள முயட்சியும் ஜனநாயக உருவாக்கத்திற்கான ஒரு விற்றமின்தான் வழங்கும் நடவடிக்கைதான் என்றார். 
Previous Post Next Post