'நாய்' என்று நினைத்து ஓநாயை காப்பாற்றிய தொழிலாளர்கள் - Yarl Thinakkural

'நாய்' என்று நினைத்து ஓநாயை காப்பாற்றிய தொழிலாளர்கள்


எஸ்தோனிய தொழிலாளர்கள் ஆற்றில் பனிக்கட்டியில் சிக்கியிருந்த ஓநாயை, நாயென நினைத்து காப்பாற்றி தங்களின் காரில் கொண்டு சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வடக்கு ஐரோப்பாவில் உள்ள எஸ்தோனியா எனும் நாட்டில், பார்னு ஆற்றிலுள்ள சிந்தி அணையில் வேலை செய்து கொண்டிருந்த இந்த தொழிலாளர்கள் உறை நிலையில் தண்ணீரில் சிக்கியிருந்த இந்த விலங்கை கண்டனர். பனி உறைந்து கிடந்த பாதையை விலக்கி சென்ற அவர்கள், பனிக்கட்டிகள் ஒட்டிய நிலையில் கிடந்த நாய் போன்றதொரு விலங்கை காப்பாற்றி, அதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க கால்நடை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது தான் அவர்கள் ஓநாயை தங்களின் காரில் கொண்டு சென்றனர்.

இந்த பெரிய தொரு நாயின் உண்மையான இயல்பு குறித்து கால்நடை மருத்துவர்கள் சந்தேகமடைந்தனர். இதனால் அந்த பகுதியிலுள்ள ஓநாய்கள் பற்றி அதிகமாக தெரிந்து வைத்திருக்கும் உள்ளுர் வேட்டைகாரர் ஒருவர், இது சுமார் ஓராண்டு வயதான ஓநாய் என்பதை உறுதி செய்துள்ளார்.

Previous Post Next Post