வரலாறு படைத்தத இலங்கை அணி! - Yarl Thinakkural

வரலாறு படைத்தத இலங்கை அணி!

தென்னாபிரிக்க அணியை 0:2 என்ற கணக்கில் வீழ்த்திய இலங்கை அணி வரலாற்றுச் சாதனை படைத்தது தொடரை கைப்பற்றியுள்ளது.

தென்னாபிரிக்க மண்ணில் அந்த அணியை டெஸ்ட் தொடரில் வீழ்த்திய மூன்றாவது அணியாகவும் இலங்கை அணி சாதித்தது. முன்னதாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளே தென்னாபிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வென்றன.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 ரி20 போட்டிகள் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இலங்கை அணி வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் நேற்றுமுன்தினம் (21) வியாழக்கிழமை போர்ட் எலிசபத் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலாவது இன்னிங்ஸில் 222 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்களையுமிந்தது.

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களையிழந்து 60 ஓட்டங்களை எடுத்திருந்த்து.

இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமானது. எம்புல்தெனிய காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். அதனால் இலங்கை அணி 154 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களையிழந்து இன்னிங்ஸை நிறைவு செய்தது.


முதலாவது இன்னிங்ஸில் 68 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற தென்னாபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.

லக்மல் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரின் துல்லியமான பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 128 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையுமிழந்த்து.

இதன்மூலம் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 197 ஓட்டங்களை தென்னாபிரிக்க அணி நிர்ணயித்தது.

இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்களையிழந்து 60 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமானதும் ஒசாட பெர்னாண்டோ – குசல் ஜோடி பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இருவரும் அரைச்சதமடைந்து அசத்தத இலங்கை அணியின் வெற்றி உறுதியானது.  இலங்கை அணி 45.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரமிழந்து 197 ஓட்டங்களைக் குவித்து 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றிபெற்றது.

குசல் மென்டிஸ் 84 ஓட்டங்களையும் ஒசாட பெர்னாண்டோ 70 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று 3ஆவது விக்கெட்டுக்காக 165 ஓட்டங்களைக் குவித்தனர்.

தென்னாபிரிக்க மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று இலங்கை அணி சாதனை படைத்தது. அத்துடன், தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதலாவது ஆசிய அணி என்ற பெருமையையும் இலங்கை அணி பெற்றது.

தென்னாபிரிக்க மண்ணில் இங்கிலாந்து அணி 11 டெஸ்ட் தொடர்களையும் ஆஸ்திரேலிய அணி 10 டெஸ்ட் தொடர்களையும் வென்றன. எனினும் எந்தவொரு ஆசிய அணியும் தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றவில்லை.

மேலும் தொடர்ச்சியான தோல்விகளால் கடும் விமர்சனத்துக்குள்ளாகிய இலங்கை அணி தோல்விகளுக்கு முற்றுபுள்ளி வைத்து மீண்டுள்ளது. இதன்மூலம் வரும் ஜூனில் ஆரம்பமாகும் உலக கிண்ண தொடரில் இலங்கை அணி வீரர்களுக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது.
Previous Post Next Post