வாள் வெட்டு குழு தலைவர் சன்னா வீடு புகுந்து தாக்குதல்! - Yarl Thinakkural

வாள் வெட்டு குழு தலைவர் சன்னா வீடு புகுந்து தாக்குதல்!

வாள் வெட்டு குழுவின் தலைவர் எனவும், மானிப்பாயில் நடைபெற்ற கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபரும், வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார் எனவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்ட சன்னா என அழைக்கப்படும் பிரசன்னாவின் வீட்டுக்குள் புகுந்து பெற்றோல் ஊற்றி மோட்டார் சைக்கிள்கள் எரியூட்டப்பட்டன என்று  பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாய் கட்டப்பாழி லேனில் உள்ள வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடத்தப்பட்டது.

வீட்டுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களை பெற்றோல் ஊற்றி எரியூட்டிவிட்டு தப்பித்தது என்று பொலிஸார் கூறினர். 

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post