யாழ்.வருகிறார் பிரதமர் ரணில்! - Yarl Thinakkural

யாழ்.வருகிறார் பிரதமர் ரணில்!

யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை வருகைதரும் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு அபிவிருத்தி தொடர்பான நிகழ்வுகளில் பங்கு கேற்கவுள்ளார்.

இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடையும் அவர் காலை 10 மணிக்கு நல்லூர் ஆலயத்திற்கு சென்று பூஜைவழிபாடுகளில் பங்கு கொள்ளவுள்ளார்.

வழிபாடுகளை முடித்துக் கொண்டு யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு செல்லும் பிரதமர் மாவட்டச் செயலக உத்தியோகஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அக் கலந்துரையாடலை முடித்துக் கொண்டு 12.15 மணியளவில் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு செல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வைத்திய சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டடத் தொகுதியினை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.

இதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜெட்விங் கோட்டலில் மதின போசன உணவை முடித்துக் கொண்டு, 1.45 மணியளவில் இருந்து 2 மணிவரைக்கும் நாவற்றுழி மற்றும் கைதடியில் புதிதாக அமைக்கப்பட்ட பாலங்கள் தொடர்பான ஆராய்வினையும் மேற்கொள்ளவுள்ளார்.
அங்கிருந்து 2.15 மணிக்கு கோப்பாய்க்கு செல்லும் பிரதமர் வலி.கிழக்கு பிரதேச செயலக நிர்வாக கட்டத்தினை திறந்து வைக்கவுள்ளார்.

இதன் பின்னர் 3.15 மணியளவில் பருத்தித்துறைக்கு செல்லும் அவர் பிரதேச செயலக நிர்வாக கட்டத்தினையும் திறந்து வைக்கவுள்ளார்.

தொடர்ந்து 4.15 மணியளவில் பலாலி உயர்பாதுகாப்பு வலையத்திற்கு செல்லும் பிரதமர் பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டு புணரமைக்கப்படுவது தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொள்ளவுள்ளார்.

பின்னர் இராணுவ உயர்பாதுகாப்பு வலையமாக இருந்து அண்மையில் பகுதியளவில் விடுவிக்கப்பட்டுள்ள மயிலிட்டி பகுதியில் மக்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிவைக்கவுள்ளார்.

இதன் பின்னர் காங்கேசன் துறைமுகத்திற்கு செல்லும் அவர் துறைமுக அபிவிருத்தி தொடர்பிலும் ஆராய்வுகளை மேற்கொள்ளவுள்ளார் என்று குறித்த பிரதமர் அலுவலகத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post