மாணவி சடலமாக மீட்பு! -விசாரணை வேட்டையில் பொலிஸார்- - Yarl Thinakkural

மாணவி சடலமாக மீட்பு! -விசாரணை வேட்டையில் பொலிஸார்-

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை நீர்த்தேகத்திலிருந்து சிறுமியொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.


மஸ்கெலியா கிலண்டில் தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சவுந்தர்ராஜ் கீத்தலா என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல்போனோர் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரிட்சைக்கு தோற்றி பெறுபேறுகளை எதிர் பார்த்துக் கொண்டிருந்துள்ளார் என பொலிஸாரால் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும், குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அட்டன் நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post