நாட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கையே அரசியல் யாப்பு! -மைத்திரிபால சிறிசேன- - Yarl Thinakkural

நாட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கையே அரசியல் யாப்பு! -மைத்திரிபால சிறிசேன-

புதிய அரசியல் யாப்பு என்ற பேச்சு தெற்கு மக்களையும், வடக்கு மக்களையும் ஏமாற்றும் ஒரு நடவடிக்கையே ஆகும் எனவும், கடந்த 4 வருடங்களில் புதிய அரசியல் யாப்பு குறித்து ஒரு பத்திரத்தையாவது எனது கையால் தொட்டதுமில்லை, அதில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து எனக்கு அறிவித்ததுமில்லையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

விகாரையொன்றில் நடைபெற்ற சமய நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

தேர்தல் ஒன்று நெருங்கும் போது புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ள சந்தர்ப்பத்தில் இந்த அரசியலமைப்பு குறித்த நடவடிக்கை சாத்தியமான ஒன்றாக நான் கருதவில்லை.

இந்த அரசியல் யாப்பு என்ற பேச்சு, ஒரு புறத்தில் தெற்கு சிங்கள பௌத்த மக்களை பதற்றமடையச் செய்யும் ஒரு நடவடிக்கையாகும். மறுபுறத்தில் வடக்கு தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகும். இவ்வாறு தான் நான் இந்த புதிய அரசியலமைப்பு குறித்த பேச்சைப் பார்க்கின்றேன்.

அரசியலமைப்புச் சீர் திருத்தமொன்று கொண்டுவரப்படுமாக இருந்தால் அதில் காணப்படும் நாட்டுக்கு முக்கியமான விடயம் குறித்து அதிக முக்கியத்துவம் செலுத்தப்படுமாக இருந்தால் எனது ஆதரவை வழங்குவேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தெற்கு-வடக்கு மக்களை ஏமாற்றும் நடவடிக்கையே அரசியல் யாப்பு!
-மைத்திரிபால சிறிசேன-

Previous Post Next Post