மஹிந்தவின் கீரிமலை ஆடம்பர மாளிகை! -சுற்றுலா சபையிடம் ஒப்படைப்பு- - Yarl Thinakkural

மஹிந்தவின் கீரிமலை ஆடம்பர மாளிகை! -சுற்றுலா சபையிடம் ஒப்படைப்பு-

வலி.காமம் வடக்கு காங்கேசன்துறை - கீரிமலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட ஆடம்பர மாளிகையை, சுற்றுலா சபையிடம் கையளிப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடியுள்ளார்.

உயர்பாதுகாப்பு வலயத்தில் கடற்படையின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஆராயும் கூட்டம் ஒன்றில் கடற்படையினர் வசம் உள்ள இந்த ஆடம்பர மாளிகை மற்றும் 100 ஏக்கர் காணிகளை சுற்றுலா சபையிடம் கையளிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த ஆடம்பர மாளிகையை வடக்கு மாகாண சபையிடம் கையளிக்குமாறு, 2015ஆம் ஆண்டு கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பில் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.

அதேவேளை, யாழ். பல்கலைக்கழகமும் இந்த மாளிகையை தமக்குத் தருமாறு கோரியிருந்தது.

எனினும், இந்த ஆடம்பர மாளிகையை சுற்றுலா சபையிடமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, காங்கேசன்துறை, கீரிமலை பகுதிகளில் உள்ள தனியார் காணிகள் பல ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்படவுள்ளன.

இந்த வாரம் ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Previous Post Next Post