யாழில் திங்களன்று கடையடையுங்கள்! -வணிகர் சங்கம் அறிவிப்பு- - Yarl Thinakkural

யாழில் திங்களன்று கடையடையுங்கள்! -வணிகர் சங்கம் அறிவிப்பு-

வடக்கு, கிழக்கு காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் மேற்கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு  யாழ்ப்பாண வணிகர் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் வணிகர் கழகம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த இரண்டு ஆண்டுகளாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் 25 ஆம் திகதியன்று இரண்டு வருடங்களைப் பூர்த்தி செய்கிறது. 

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தங்களுக்கு  சாதகமான பதில் கிடைக்க வேண்டும் எனவும் காணாமலாக்கப்பட்டவர்களை மீள ஒப்படைக்க வேண்டும் எனக் கோரியும் அன்றைய தினம் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு யாழ்ப்பாண வணிகர் கழகம் தனது முழு ஆதரவை வழங்குகிறது. 

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் தற்போது எங்கு இருக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை பாதிக்கப்பட்ட உறுவுகளுக்குத் தெரியப்படுத்தும் வகையில் மனித உரிமையை மதிக்கும் நாடுகள் கூடிய அக்கறையுடன் கவனமெடுத்து இந்த விடயத்தில் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கோருகிறோம். 
Previous Post Next Post