இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் - Yarl Thinakkural

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள் குண்டு வீச்சில் ஈடுபட்டுள்ளன. தாக்குதலின் போது இரு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், விமானியை கைது செய்துள்ளதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
குண்டு வீசி விட்டு திரும்பிய பாகிஸ்தான் விமானங்களை பின்தொடர்ந்து சென்ற இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாகவும், ஒரு விமானம் பாகிஸ்தான் ஆளுகைக்குட்பட்ட காஷ்மீருக்குள்ளும், இன்னொரு விமானம் இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரிலும் விழுந்ததாகவும், ஒரு இந்திய விமானியை தாங்கள் கைது செய்துள்ளதாகவும் பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post