மாகாண தேர்தலில் இணைவதா? மைத்திரி-மஹிந்த இன்று அவசர சந்திப்பு! - Yarl Thinakkural

மாகாண தேர்தலில் இணைவதா? மைத்திரி-மஹிந்த இன்று அவசர சந்திப்பு!

நாட்டின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை அவசர சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு சந்திப்பு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்ற தகவல் வெளியிட்டுள்ளார்.

இதேநேரம், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி என்பன தனிநபரில் தங்கியிருக்காது, ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக டிலான் பெரேரா தெரிவித்துள்ளது.
Previous Post Next Post