சம்பியன் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற யங்கம்பன்ஸ் அணி! - Yarl Thinakkural

சம்பியன் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற யங்கம்பன்ஸ் அணி!

சம்பியன் அணியை சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வீழ்த்தி மீண்டும் ஒரு இறுதிப்போட்டிக்கு தகுதியானது கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணி.

உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழக உதைப்பந்தாட்ட தொடரின் அரைஇறுதிப்போட்டியில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணியை எதிர்த்து கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் அணி மோதியது.

போட்டியின் முற்பாதியாட்டம் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாது இரு அணிகளும் ஆட முற்பாதியாட்டத்தில் எவ்வித கோல்களுமின்றி ஆட்டம் முடிவுற்றது, தொடர்ந்த இரண்டாவது பாதியாட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய யங்கம்பன்ஸ் அணிக்கு ரதன் ஒரு கோலினை பெற்றுக்கொடுக்க தமது ஆட்டத்தை வேகப்படுத்திய றேஞ்சர்ஸ் அணி வீரர் அவ் அணிக்கு எதிரான ஒரு கோலினை போட்டு ஆட்டத்தை சமப்படுத்தினார்.

 இறுதி ஆட்ட நேர முடிவில் 01:01 என்று சமநிலையானதால் வெற்றியினை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதை முடிவில் யங்கம்பன்ஸ் அணிக்கான மாற்றுக்கோல் காப்பாளர் பிரகாஷ் கை கொடுக்க 03:02 என்ற ரீதியில் றேஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதியானது யங்கம்பன்ஸ் அணி. ஆட்ட நாயகனாக பிரகாஷ் தெரிவு செய்யப்பட்டார்.
Previous Post Next Post