இராணுவத்தின் பவுசர் மோதி பெண் படுகாயம்! -மிருசுவிலில் இன்று சம்பவம்- - Yarl Thinakkural

இராணுவத்தின் பவுசர் மோதி பெண் படுகாயம்! -மிருசுவிலில் இன்று சம்பவம்-

தென்மராட்சி மிருசுவில் பகுதியில் இராணுவத்தின் பவுசர் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற இச் சம்பவத்தில் அதே இடத்தினைச் சேர்ந்த பெண்ணே காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டவர் ஆவர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இராணுவத்தின் பவுவர் வாகனத்தை தடுத்து வைத்துள்ளதுடன், சாரதியையும் கைது செய்துள்ளனர்.
Previous Post Next Post