கமலின் தேர்தல் அறிவிப்பு! -தனித்து போட்டியிட முடிவு- - Yarl Thinakkural

கமலின் தேர்தல் அறிவிப்பு! -தனித்து போட்டியிட முடிவு-

விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மநீம தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளும் போட்டியிட உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி தனது கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார். வரும் 21ஆம் தேதியுடன் அந்தக் கட்சியை ஆரம்பித்து ஒரு வருடம் ஆகப்போகிறது.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்துவரும் கமல் மக்களைச் சந்தித்து மநீமவுக்கு ஆதரவு திரட்டுகிறார். இந்நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில் மநீம வரும் பொதுத்தேர்தலில் 40 தமிழகம் மற்றும் புதுச்சேரில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் எனவும் திமுகவுடன் கூட்டணி அமைக்காது எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Previous Post Next Post