சிரியா - ஈராக் எல்லையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்! - Yarl Thinakkural

சிரியா - ஈராக் எல்லையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்!

சிரியா - ஈராக் எல்லை பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கடும் எதிர் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ஆதரவு படைகள் தெரிவித்துள்ளன.

சிரியாவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள எல்லை பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் 600 பேர் வரையில் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு நிகராக அமெரிக்க ஆதரவு படைகளும் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஈராக் மற்றும் சிரியாவின் பெரும்பாலான பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர்களின் பலம் உச்சத்தில் இருந்தது.

இந்தநிலையில், கடுமையான தோல்விகளைச் சந்தித்த ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் இன்னும் 14 ஆயிரம் முதல் 18 ஆயிரம் பேர் வரை இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை கணக்கிடுகிறது.

அவர்களில் 3,000 பேர் வரை வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post