சிறைக்கைதிகள் இருவர் தப்பியோட்டம்! -தேடுதல் வேட்டையில் பொலிஸ்- - Yarl Thinakkural

சிறைக்கைதிகள் இருவர் தப்பியோட்டம்! -தேடுதல் வேட்டையில் பொலிஸ்-

மதவாச்சி சுற்றுலா நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்ற வழக்குகளில் ஆஜர்படுத்துவதற்காக அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட இரண்டு சிறைக் கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்று மாலை 04.30 மணியளவில் சிறைச்சாலை பஸ்ஸில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்து செல்ல முற்பட்ட வேளை கைதிகள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

மதவாச்சி பூனேவ பிரதேசத்தைச் சேர்ந்த பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள 24 வயதுடைய கைதி ஒருவரும், மதவாச்சி, மககனதராவ பிரதேசத்தைச் சேர்ந்த பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கைதி ஒருவருமே தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பிச் சென்ற கைதிகளை மீண்டும் கைதுசெய்வதாற்காக மதவாச்சி பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
Previous Post Next Post