விக்னேஸ்வரனிடம் சரணடையுங்கள்! -கூட்டமைப்புக்கு சிவசக்தி ஆனந்தன் அறிவுறுத்தல்- - Yarl Thinakkural

விக்னேஸ்வரனிடம் சரணடையுங்கள்! -கூட்டமைப்புக்கு சிவசக்தி ஆனந்தன் அறிவுறுத்தல்-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது கட்சியை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை மற்றும் மக்களை ஏமாற்றும் தமது இராஜதந்திர பயணத்தில் தோல்லியடைந்து விட்டோம் என்பதை தமிழ் மக்கள் மத்தியில் பிகிரங்கமா ஒப்புக் கொள்ள வேண்டும்.

பிழைகளையும் தோல்விகளையும் ஏற்றுக் கொண்டு வடக்கு மாதகாண முன்னள் முதலமைச்சரின் தலமையில் ஆரணியாவ பயணிக்க முன்வர வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தரன் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ்ப்பாணம் மாற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்:-

எமது அமைப்பு ஆயுதம் ஏந்தி போராடிய போது பல இன்னல்களை சந்தித்தது. ஆனாலும் நாம் ஜனநாயக ரீதியாக செயற்பட ஆரம்பித்ததில் இருந்து நாம் அந்த பன்பை மீறாத கட்சியாக இருக்கின்றோம்.

இந்த மாநாட்டுக்கு ஏராளமான இளம் சந்ததியும் பெண்களும் வந்துள்ளீர்கள் இதுதான் எமது பயணத்தினதும் வரலாற்றினதும் வெற்றியாகும். தமிழ் மக்களை பொறுத்தவரையில் தற்போது எமது தலைமைத்துவம் தொடர்பில் மிகுந்த விரக்தி ஏற்பட்டுள்ளது. தற்போதைய தமிழ்த் தலைமைகள் என்று கூறுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது நலன் சார்ந்தே செயற்படுகின்றனர். அதிலும் கூட்டமைப்பில் உள்ள ஒரு கடசியின் சுயநலனுக்காக கொள்கையில் இருந்து விலகி மக்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றனர்.

கூட்ட்டமைப்பினர் தாம் இராஜதந்திர ரீதிஜாக செயற்பட்டு வருவதாக கூறி தமிழ் மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்ட்னர். இதனால் இன்றும் மக்கள் தெருவில் இருந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். கூட்ட்டமைப்பு அரசின் வரவு செலவு திட்ட்ங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கி வருகின்றது.

அரசியல் தீர்வினை கரணம் காட்டி இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை கால அவகாசம் வாங்கி அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவித்துள்ளது. போர்க்குற்ற விசாரணை,பொறுப்புக் கூறல் விடயங்கள் இல்லாமல் போனதற்கு முழு பொறுப்பையும் தமிழ்த் தேசியக் கூடடமையினரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினர் அரசின் வரவு செலவுத் திடடத்துக்கு தொடர்ச்சியாக ஆதரவினை வழங்கி வருகின்றனர். இதனால் தமிழ் மக்கள் அடைந்த நன்மை என்ன? ஒவ்வொரு வரவு செலவுத்திடடத்திலும் பாதுகாப்பு அமைசுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

அதன் ஊடக இராணுவ வசம் உள்ள காணிகளில் புதிதாக புத்தர் சிலைகளும், விகாரைகளும் முளைக்கின்றன. காணிகள் அபகரிக்கப்படுகின்றன. அவ்வாறு பறிக்கப்படும் காணிகளில் திடடமிடட சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன.

கூட்ட்டமைப்பினர் இராஜதந்திரமாக செயற்படுகின்றனர் என்றால் இவை எல்லாம் எவ்வாறு நடக்கின்றது. எனவே இவர்களின் இராஜதந்திர பயணங்கள் தோல்வி அடைந்து விடடன. இதனை மக்கள் மத்தியில் ஒப்புக் கொண்டு விட்டு விக்கி தலைமையிலான மாற்று அணியில் அனைவரும் ஓரணியில் திரளுங்கள் என அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.
Previous Post Next Post