திடீர் பணிப்புறக்கணிப்பில் யாழ்.போதனா வைத்திய சாலை தாதியர்கள்! - Yarl Thinakkural

திடீர் பணிப்புறக்கணிப்பில் யாழ்.போதனா வைத்திய சாலை தாதியர்கள்!

யாழ்.போதனா வைத்திய சாலை தாதியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் வைத்திய சாலையின் வைத்திய சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள தாதியர்கள் தொடர்பில் அபதூறு பரப்பும் செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தே அவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

எந்தவிதமான முன்னறிவிப்பின்றி தாதியர்கள் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக பிரகணம் செய்யப்பட்ட வைத்திய சேவையினை திடீரென பகிஸ்கரிப்பு செய்யப்பட்டமை பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post