யாழில் வீடு புகுந்து சராமாரியாக வாள்வெட்டு! - Yarl Thinakkural

யாழில் வீடு புகுந்து சராமாரியாக வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் வரணி பகுதியில் உள்ள வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குழுவினர் வெளிநாட்டில் இருந்து வந்த நபரை சராமாரியாக வாளால் வெட்டியதுடன், அதனை தடுக்க வந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

வாள்வெட்டுக்கு உள்ளான நபர் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து தனது சொந்த ஊரான வரணிப் பகுதிக்கு வந்துள்ளார்.

ஊரில் உள்ள கோயில் ஒன்றின் பிரச்சினை காரணமாக, வெளிநாட்டில் வசிக்கும் நபரொருவர், குறித்த நபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

12 பேர் கொண்ட குழுவினர் குறித்த நபரை வீட்டுக்குள் புகுந்து, சரமாரியாக வாளினால் வெட்டியுள்ளனர். அதனைத் தடுக்க முற்பட்ட வயோதிப தாய், தந்தையையும் தள்ளி விழுத்தியுள்ளனர்.

வாள் வெட்டுக்கு இலக்கான நபர் வரணி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post