புதிய கட்சி ஆரம்பிக்கும் இயக்குநர் கௌதமன் - Yarl Thinakkural

புதிய கட்சி ஆரம்பிக்கும் இயக்குநர் கௌதமன்

தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு இயக்குநரும் சமூக ஆர்வலருமான கௌதமன் கட்சி ஆரம்பிக்கவுள்ளார். கட்சி ஆரம்பிப்பது குறித்து பேசிய கௌதமன், என்னுடைய கருத்தை கொண்ட சிலர் அரசியலில் உள்ளனர். ஆனால் அவர்கள் செயலில் இறங்க தயங்குகின்றனர்.

இனியும் யாரையும் நம்பிக்கொண்டிருக்க நாங்கள் தயாராக இல்லை. எனவே நம் மக்களுக்கான அரசியலை பேச நாங்களே கட்சி ஆரம்பிப்பதென தீர்மானித்து விட்டோம்.
ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழ் மொழியும், தமிழர்களின் கலாசாரமும் வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. இனியும் அழிவு ஏற்படாமல் அரணாக நிற்போம். இதுவரை இழந்ததை மீட்போம்.

நான் கட்சி ஆரம்பிக்கிறேன் என சொன்னதும் மாற்றுக் கட்சியில் இருப்பவர்கள் கூட, எந்த உதவியானாலும் கேளுங்கள் செய்கிறோம் என தெரிவித்துள்ளனர். கட்சியின் பெயர், கொடி, கொள்கை அறிவிப்புகள் போன்றவை அதிகாரபூர்வமாக வெளியிடப்படும். எங்கள் கட்சியின் உதயம் ஒரு மிகப்பெரிய ஜனநாயக யுத்தத்தின் ஆரம்பமாக இருக்க போகின்றது என்பதை போகப் போக எல்லோரும் உணர்வார்கள் என குறிப்பிட்டார்.Previous Post Next Post