சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு! -யாழில் போராட்டம்- - Yarl Thinakkural

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு! -யாழில் போராட்டம்-

நாட்டின் சுதந்திர தினத்திற்கு எதிர்பு வெளிப்படுத்தும் வகையில் யாழ்.பஸ் நிலையம் முன்பாக இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம உரிமை இயக்கத்தின் நேற்பாட்டில் இவ் ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை காலை யாழ்பி ரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.

போலி சுதந்திர தினம் எமக்கு வேண்டாம் என்ற தொணிப் பொருளில் இவ்வார்ப்பாட்டமானது காணாமல் ஆக்கப்பட்ட உறவுளை தேடித்தருமாறும், நீண்ட காரமாக சிறையில் தடுத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Previous Post Next Post