-ஆவா குழுவின் ஆட்டம் முடிந்தது- தலைமறைவானவர்களை சரணடைய பொலிஸ் அறிவுறுத்தல்!  - Yarl Thinakkural

-ஆவா குழுவின் ஆட்டம் முடிந்தது- தலைமறைவானவர்களை சரணடைய பொலிஸ் அறிவுறுத்தல்! 

வடக்கில் மிகவும் அச்சுறுத்தலாக காணப்பட்ட ஆவா குழுவினரை முற்றாக கைது செய்து விட்டோம் என்று வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பனான்ர்டோ தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

வடக்கில் அச்சுறுத்தல் மிக்கதாக கடந்த காலங்களில் ஆவா என்ற வன்முறை குழு காணப்பட்டது. ஆனால் தற்போது அதில் ஒரு சிலரை தவிர ஏனையோரை கைது செய்து நீதிமன்றங்களில் முற்படுத்தியுள்ளோம்.

ஆனால் அவர்களில் சிலர் நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட போது பிணை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்னமும் கைது செய்யப்படாத நிலையில் மறைந்திருக்கும் ஆவா குழு உறுப்பினர்களுக்கு தாம் ஒரு கோரிக்கை விடுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

அதாவது தலைமறைவாக உள்ளவர்கள் பொலிஸ் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் சரண்டைந்து உங்களது வழக்குகளை முடிவுறுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post