கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் கொலை! - Yarl Thinakkural

கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் கொலை!

பிட்டிகல – தல்கஸ்பே பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் நண்பர்களுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து நடந்த தாக்குதலே கொலையாக மாறியுள்ளது என்று பொலிஸார் தகவல்  வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டதுடன், சம்பவ இடத்தில் 6 பேர் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Previous Post Next Post