ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நினைவேந்தல்! - Yarl Thinakkural

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நினைவேந்தல்!

நாட்டில் நடைபெற்ற இறுதி யுத்த நடவடிக்கையின் போது ஊடகப்பணியில் உயிர் பறிக்கப்பட்ட நாட்டுப்பற்றாளரும், ஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பிரதான வீதி,யாழ். நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் நினைவேந்தல் நிகழ்வும் அதனை தொடர்ந்து 3.30 இற்கு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் சத்தியமூர்த்தியின் நினைவுகளுடன் பேசுதல் எனும் நூல் வெளியீடும் நடைபெறவுள்ளது.

யாழ்.ஊடக அமையம் மற்றும் எழுகலை இலக்கிய பேரவை என்பவை இணைந்து முன்னெடுக்கும் நிகழ்வில் ஊடக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அவரது நண்பர்கள் நினைவுரைகளை ஆற்றவுள்ளனர்.

இறுதி யுத்த காலத்தில் அர்ப்பணிப்புடனான ஊடகப்பணியில் பங்கெடுத்திருந்த ந.சத்திமூர்த்தி இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.

அவரது உன்னதமான ஊடகப்பணியினை கௌரவித்து நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post