ஓட்டோ–லொறி நேருக்கு நேர் மோதி விபத்து! -தாயும் மகளும் பலி; தந்தை படுகாயம்- - Yarl Thinakkural

ஓட்டோ–லொறி நேருக்கு நேர் மோதி விபத்து! -தாயும் மகளும் பலி; தந்தை படுகாயம்-

கொழும்பு – வெல்லவாய பிரதான வீதியின் தங்கல்ல, சீனிமோதர பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

ஓட்டோ ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த ஓட்டோ சாரதி, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

லுணுகம்வெஹர பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய தாயும் 3 வயதுடைய மகளுமே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post