ஜூன் முதல் மாவட்ட செயலகங்கள் ஊடாக கடவுச் சீட்டு! - Yarl Thinakkural

ஜூன் முதல் மாவட்ட செயலகங்கள் ஊடாக கடவுச் சீட்டு!

கடவுச்சீட்டுக்கள் மாவட்ட செயலகங்கள் ஊடாக வழங்கும் நடவடிக்கைகள் இவ்வருடம் ஜூன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படுமென குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டை பெறுவதற்காக மக்கள் கொழும்பிற்கு வரவேண்டும் என்ற அசௌகரியங்களைத்  தவிர்க்கும் நோக்குடன் மாவட்ட மட்டத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள கிளைக் காரியாலயங்களை அமைத்து ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமை காரியாலயத்துக்கு அனுப்பி வைப்பதன் மூலம்  கடவுச்சீட்டுக்கள் வழங்கும் பணி இடம்பெறவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தேசிய அடையாள அட்டைகளை பிரதேச செயலகங்கள் மூலமாக வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள 331 பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்கள கிளைக் காரியாலயங்களுக்கு ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக கொழும்புக்கு வருவதனை குறைக்கும் நோக்கிலேயே பிரதேச மட்டத்தில் இந்நடவடிக்கை பரவலாக்கப்படுவதாகவும் ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
Previous Post Next Post