விபத்து அவசர சிகிச்சை பிரிவு! -இன்று யாழில் திறந்து வைப்பு- - Yarl Thinakkural

விபத்து அவசர சிகிச்சை பிரிவு! -இன்று யாழில் திறந்து வைப்பு-

யாழ்.போதனா வைத்திய சாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிவுக்கான கட்டம் இன்று வியாழக்கிழமை திறந்து வைக்ப்படவுள்ளது.

இப் பிரிவில் மூன்று சத்திரசிகிச்சை கூடங்களும் ஸ்கெனர் மற்றும் எஸ்ரே கூடங்களுமாக சுமார் 100 நோயாளர்களை தங்கவைத்து சிகிச்சை வழங்க கூடிய வகையில் கட்டில்களும் உள்ளன.

யாழ்ப்பாணத்திற்கு இன்று வரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண மற்றும் நிதியமச்சர் மங்கள சமரவீர பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு இப் புதிய கட்டத் தொகுதியினை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கவுள்ளனர்.

Previous Post Next Post