இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க முடியும் - Yarl Thinakkural

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க முடியும்


இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எங்களாலும் திருப்பி தாக்க முடியும் என்பதை நிருபிக்கவே இன்று பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்தின என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய தாக்குதல் குறித்து அந்நாட்டு பிரதமர்  இம்ரான் கான் விளக்கமளித்தார். புல்வாமா தாக்குதல் குறித்து ஆதாரங்களை தந்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என கூறினோம். எங்கள் பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதற்காக நாங்கள் பதில் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. எங்களால் திருப்பி தாக்க முடியும் என்பதை நிருபிக்க மட்டுமே பாகிஸ்தான் விமானங்கள் இன்று தாக்குதல் நடத்தின.

Previous Post Next Post