எந்த தேர்தலையும் பிற்போடமுடியாது! -மஹிந்த தேசப்பிரிய- - Yarl Thinakkural

எந்த தேர்தலையும் பிற்போடமுடியாது! -மஹிந்த தேசப்பிரிய-

ஜனாதிபதி தேர்தலையோ அல்லது பொதுத்தேர்தலையோ பிற்போடுவதற்கு இடமளிக்க போவதில்லையென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனதிபதி தேர்தல் நடைபெறும் தினத்தை முன்கூட்டியே நேரகாலத்துடன் அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post