ட்ரம்ப்-கிம் பேச்சுவார்த்தை தோல்வி - Yarl Thinakkural

ட்ரம்ப்-கிம் பேச்சுவார்த்தை தோல்விவியட்நாமில் நடந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் -கிம் உச்சிமாநாட்டில் பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. ஹனோயில் நடந்த உச்சிமாநாட்டில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அணு ஆயுதத்தை முழுமையாக கைவிட வடகொரியா ஒப்புக்கொள்ளுமா என்பதே பேச்சுவார்த்தையின் முக்கிய விடயமாக இருந்தது.
வடகொரியா தன் மீதான பொருளாதார தடையை முழுமையாக நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததை அமெரிக்கா நிராகரித்ததையடுத்து ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் உச்சிமாநாடு எந்தவித உடன்பாட்டையும் எட்டாமல் முடிந்தது.
Previous Post Next Post