பிரபாஸ்-அனுஸ்கா மீண்டும் நெருக்கத்தில்! - Yarl Thinakkural

பிரபாஸ்-அனுஸ்கா மீண்டும் நெருக்கத்தில்!

அனுஸ்காவுக்கும்  தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் மலர்ந்ததாகவும்  இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் தொடர்ந்து தகவல்கள் பரவின. பிரபாஸ் தற்போது மெகா பட்ஜெட்டில் தயாராகும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது.

சமீபத்தில் இருவரும் ஜோடியாக தெலுங்கு டைரக்டர் ராஜமவுலி இல்ல திருமணத்தில் கலந்துகொண்டது காதலை உறுதிப்படுத்துவதாக இருந்தது என்று பட உலகில் கிசுகிசுத்தனர். அனுஷ்கா சமீபத்தில் வெளிநாடு சென்று உடல் எடையை குறைத்துவிட்டு வந்தார். மெலிந்த அவரது புதிய தோற்றத்தை சமூக வலைத்தளங்களில் பார்த்து ரசிகர்கள் வியந்தனர்.

காதல் கிசுகிசுக்களை இருவரும் உறுதிப்படுத்தாமலேயே உள்ளனர். பிரபாஸ் கூறும்போது, “ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் ஒரு நடிகரும், நடிகையும் இணைந்து நடித்தால் அவர்கள் காதலிப்பதாக பேசுவார்கள். நாங்கள் நட்பாகத்தான் பழகுகிறோம்” என்றார். இதன்மூலம் காதலில் விரிசல் ஏற்பட்டதாகவும் பேச்சு கிளம்பியது.

இந்த நிலையில் பிரபாசும், அனுஷ்காவும் ஜோடியாக ஜப்பான் புறப்பட்டு செல்கிறார்கள். இருவரும் சேர்ந்து நடித்துள்ள படங்களை விளம்பரப்படுத்த அங்கு செல்கின்றனர். இதனால் இருவரும் காதலில் மீண்டும் நெருக்கமாகி இருப்பதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கள் பரவி உள்ளன.
Previous Post Next Post