-விசேட தேவையுடைய இளைஞரின் துணிச்சல்- நாட்டில் அமைதி வேண்டி யாழ் - கொழும்பு பயணம்! - Yarl Thinakkural

-விசேட தேவையுடைய இளைஞரின் துணிச்சல்- நாட்டில் அமைதி வேண்டி யாழ் - கொழும்பு பயணம்!

இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கம் ஏற்படவேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சிறப்புத் தேவையுடைய இளைஞரான மொஹமட் அலி, மூன்று சில்லு துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளர்.

தமிழ் மாற்று திறனாளிக்கள் அமைப்பின் ஒழுங்கமைப்பில் இந்தப் பயணம் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.

இந்த பயணத்தில் கொழும்பு நோக்கி செல்லும் மொஹமட் அலி கொழும்பிலிருந்து இதர பகுதிகளுக்கும் சென்று மீண்டும் யாழ்ப்பாணத்தை நோக்கி பணிக்கவுள்ளார்.

இந்த பயணத்தின் பிரதான நோக்கம் இலங்கையில் அமைதி மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உருவாக்கப்படவேண்டும், சிறப்புத் தேவையுடையோரின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என மொஹமட் அலி கூறியுள்ளார்.
Previous Post Next Post