சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டியுங்கள்! -கஜேந்திரகுமார் அழைப்பு- - Yarl Thinakkural

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டியுங்கள்! -கஜேந்திரகுமார் அழைப்பு-

இலங்கை சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டியுங்கள் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன், கிளிநொச்சியில் நடைபெவுள்ள போராட்டத்திற்கு அவைரும் அணிதிரளும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பெப்ரவரி 04ஆம் திகதி (நாளைமறுதினம்) இலங்கையின் சுதந்திர தினத்தை வடக்கு – கிழக்கு தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமென உரிமையுடன் கோருகின்றோம்.

அன்றைய தினம் காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி கந்தசாமி கோயில் முன்றலில் நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஆயிரம் ஆயிரமாய் கலந்துகொள்ளுமாறும் அறைகூவல் விடுக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
Previous Post Next Post